இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி வடலூர் ஈக்தா மைதானத்தில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் 500 மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர் மேலும் ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
பின்னர் வடலூர் ஈக்தா மைதானத்திலிருந்து புறப்பட்ட இஸ்லாமியர்களின் பேரணி வடலூர் நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது, இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வடலூர் ஜமாத் தலைவர் அவர்கள் கூறுகையில் மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடந்து வரும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தேமுதிக வடலூர் நகரச் செயலாளர் ஜாகிர் உசேன், திமுக நகர மன்ற உறுப்பினர் ஷாகுல் அமீது மற்றும் ஜமாத் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment