கிறிஸ்துவ மக்கள் முன்னணியின் மாநில செயலாளர் ராயப்பன் அவர்கள் கருத்துரை வழங்கினார், ஆர்ப்பாட்டத்தில் பழங்குடி கிறிஸ்தவ மக்களை தாக்கி நிலங்களை கையகப்படுத்தி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்களை அடித்து நொறுக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கடந்த மே மாதம் முதல் நடந்து வரும் இத்தாக்குதல் இன்று வரை தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது இதனை மத்திய அரசு கண்டு கொள்ளாததை வன்மையாக கண்டிக்கிறோம்.
கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது, நிகழ்வில் கிறிஸ்தவ மக்கள் முன்னணி சேர்ந்த மரிய ஆரோக்கியம், இருதையசாமி இந்திய தேசிய காங்கிரஸ் ஏ.எஸ். சந்திரசேகர் திராவிட கழக மாநில செயலாளர் துரை சந்திரசேகர் வன்னியர் கிறிஸ்தவ பேரவை ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment