கடலூர் அருகே குணமங்கலத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நிறைவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி .சுப்பிரமணியன் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவபெருமான், கிளைக் கழக செயலாளர் முகுந்தன் ,மாவட்ட தொண்டரணி நா. கராத்தே பாபு ,மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment