இப்பகுதிகளில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தந்த நிலையில் பணிகள் நடைபெற்று வந்து அப்பணிகள் முடிவுற்றபின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இதனை கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அதிமுக புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவருமான சி.என்.சிவப்பிரகாசம், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் வீரமுடையாநத்தம் கிராமத்தில் புவனகிரி எம் எல் ஏ அருண்மொழிதேவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய பலர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment