கடலூர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. கவிதா மற்றும் போலீசார் மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு கடந்த 28-5-2023 தேதி கடலூர் அடுத்த மாவடிப்பாளையம்; கிராமத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது விலாங்கு (எ) நடராஜன் வயது 36, த/பெ ஏகாம்பரம், மெயின் ரோடு, மாவடிப்பாளையம், திருமாணிக்குழி அஞ்சல், கடலூர் என்பவர் அவரது வீட்டின் அருகே 120 லிட்டர் சாராயம் வைத்திருந்தவரை பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு, திருப்பாதிரிபுலியூர் நிலையங்களில் 4 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருபவர் என்பதால், இவரின் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டதின் பேரில் விலாங்கு (எ) நடராஜனைஓராண்டு தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment