கடலூர் அடுத்த சமுட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி ரங்கசாமி இவருடைய காரில் சொந்த வேலையாக கடலூருக்கு வந்தார் அப்போது இவரது காரின் மேல் மயில் ஒன்று இருந்துள்ளது இதனை கவனிக்காமல் கடலூர் லாரன்ஸ் சாலை வழியாக வரும்போது பொதுமக்கள் இது குறித்து அப்பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நாகராஜிடம் தகவல் தெரிவித்தனர், உடனடியாக அந்த காரை நிறுத்தினார்.
இதுப்பற்றி காரில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் மயில் எப்படி காரின் மீது வந்தது என்று தெரியவில்லையென்றும் அரசு பேருந்து கழகம் அருகே வரும் போது ஏதோ சத்தம் கேட்டது ஆனால் அதை கவனிக்காமல் வந்து விட்டோம் என்று கூறினார்கள் பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது உடனடியாக வந்து மயிலை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தார் பாதுகாப்பாக மயிலை காப்பாற்றிய போக்குவரத்து காவலர் நாகராஜை அப்பகுதி மக்கள் பாராட்டினர்
No comments:
Post a Comment