சேத்தியாத்தோப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்; இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கடுமையான காயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2023

சேத்தியாத்தோப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்; இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கடுமையான காயம்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சிதம்பரத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் தனியார் இருசக்கர வாகன விற்பனையகம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையான சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. அப்போது பேருந்துகளின் இரண்டு பக்க முன்பகுதியும் நொறுங்கியது. 


இரண்டு பேருந்து ஓட்டுநர்களுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது. மேலும் தனியார் மற்றும் அரசுப் பேருந்தில் வந்த 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் லேசான காயங்கள் இருந்ததால் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். 


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அரசு பேருந்தின் ஸ்டியரிங் ராடு கட்டானதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதிக் விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

*/