கனசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அனுமதி இல்லை என்கிற பதாகையை அகற்றம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 June 2023

கனசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அனுமதி இல்லை என்கிற பதாகையை அகற்றம்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் முன்னிட்டு தேர் மற்றும் தரிசனத்தை முன்னிட்டு 24, 25 ,26 ,27 ஆகிய நான்கு நாட்கள் பக்தர்கள் கனகசபை மேடையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் சார்பாக கனகசபை மேடைமேல் அருகில் பாதகை பலகை வைத்திருந்தனர்.

இதுகுறித்து கனசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா சிதம்பரம் காவல்துறை  உதவி கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.மேலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த போர்டை  24.6.2023 - 5:45 மணியளவில் அறநிலத்துறை அதிகாரி சரண்யா அகற்றக் கூறினார்.


இதனால் அதிகாரிகளுக்கும் திட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இந்நிலையில் இன்று 26.6.2023 மாலை 4.25 மணிக்கு அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் துணை ஆட்சியர் திருமதி பூமா மற்றும் சிதம்பரம்  உதவி  கண்காணிப்பாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்கிற பதாகையை அகற்றினார் இதனால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 

No comments:

Post a Comment

*/