இந்த சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளோடு தொடர் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள்(22/06/2023 வியாழன்) இன்று புவனகிரி அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் ஒன்று திரண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளுக்குப் பதாகைகளை ஏந்தியவாறுநன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் நிர்வாகி சாமிநாதன் ஆகியோர் கூறும்போது, கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், சாத்தப்பாடி, ஆதனூர், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி ஆகிய கிராம விவசாயிகள் ஒன்று சேர்ந்து 2012 ஆம் ஆண்டு சங்கம் ஆரம்பித்து அதன் மூலம் மத்திய, மாநில அரசுகளை அணுகி அதன் மூலம் முதல் கட்டமாக மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஒரு ஏக்கருக்கு இழப்பீடாக 23 லட்சம் வழங்கப்படும் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார்.
இந்தத் தொகை போதுமானதாக இல்லை என தெரிவித்தோம். அதன் பிறகு 25 லட்சம் ரூபாய் என அறிவித்தார்கள். இதுதவிர வீட்டுமனை ஒரு சென்ட்க்கு ஏழரை லட்ச ரூபாயும், வாழ்வாதாரமாக 26 லட்ச ரூபாயும், 10 சென்ட் இடமும், அதில் 1200 சதுர அடி வீடும், தகுதி அடிப்படையில் வேலையும் தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக மத்திய அரசு, மாநில அரசு, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோருக்கு 7 கிராம மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கேயுள்ளஒரு சில உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூறும் சில அறிவிப்புகள் பலன் தராது.எங்களுக்குத் தேவையான அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் முன் வைத்திருக்கின்றோம். ஏற்கனவே நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு 6 லட்சரூபாய் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கும் 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இதை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் டெல்லிக்குச் சென்று அமைச்சரை சந்தித்து இதற்கும் ஒப்புதல் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
No comments:
Post a Comment