கடலூரில் மக்கள் தொடர்பு பேரியக்கம் சார்பில் பாரதப் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க மாநாடு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

கடலூரில் மக்கள் தொடர்பு பேரியக்கம் சார்பில் பாரதப் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க மாநாடு.


கடலூர் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி மக்கள் தொடர்பு பேரியக்கம் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க மாநாடு கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓ பி அணி மாநில செயலாளர் குடிகாடு இரா. அரங்கநாதன் தலைமை தாங்கினார். 


மாநில நிர்வாகிகள் அரசு. ரங்கேஷ் ,சுபஸ்ரீ தவபாலன் ,,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் காரை. கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால சாதனை விளக்க மாநாட்டில் ஓ பி சி  தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் எஸ். கே. கார்வேந்தன், ஓபிசி அணி மாநில தலைவர் சாய் சுரேஷ், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி பட்டியல அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் ஜி. மணிகண்டன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 

இந்த மாநாட்டில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பரசன் ,பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவி ஜெயா தசரதன், எஸ் டி அணி வேலாயுதம், ஓ பி அணி மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு அணிகளைச் சார்ந்த மாநில  மாவட்ட, ஒன்றிய, அணி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/