கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அஸ்காட் திட்டத்தின் சார்பாக கால்நடை உதவி மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறை சுபா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. பயிற்சியின்போது கால்நடைகளுக்கு வரும் நோய்கள் தடுப்புமுறைகள் சிகிச்சை குறித்து பேராசிரியர் சிலம்பரசன் எடுத்துரைத்தார். கடலூர்் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர்.ஆர்.மோகன் தலைமை தாங்கி பயிற்சியின் நோக்கம் குறித்தும் கால்நடை உதவி மருத்துவர்களின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் இந்த அஸ்காட் திட்டப்பயிற்சியில் விருத்தாசலம் உதவி இயக்குநர் டாக்டர்.ஜி.பெரியசாமி, கடலூர் உதவி இயக்குநர்கள் டாக்டர். எப்.எக்ஸ்.இராஜேஷ்குமார், மரு.மோகன்குமார். மரு.எச்.மோகன். கலந்துகொண்டனர்.இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர். மரு.வெங்கட்ராமன் மற்றும் மரு.சுந்தரம். ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் டாக்டர் சுந்தரம் நன்றி கூறினார். பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment