மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 June 2023

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான துப்பாக்கி  சுடும்போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 16.6.2023, 17.6.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. வடக்கு மண்டல காவல்துறை சார்பில் கடலூர் மாவட்டம் ஆயுதப்படை தலைமை காவலர்  வினோத்குமார் அவர்கள் கார்பைன் துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் பங்கேற்று தனிநபர் கோப்பை பெற்றார். 


ஊமங்கலம் காவல் நிலையம் முதல்நிலை காவலர்  அன்பரசன் அவர்கள் இன்சாஸ் (300 கஜம் SNAP) குண்டு சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றார். ஆயுதப்படை முதல் நிலை காவலர் கிருஷ்ணராஜ் அவர்கள் (50 கஜம் SNAP) கார்பைன் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வெங்கல பதக்கம் பெற்றார். மேலும் தலைமை காவலர் வினோத்குமார். முதல்நிலை காவலர் கிருஷ்ணராஜ் ஆகியோர் இணைந்து ஒட்டுமொத்த அணிக்கான கேடயம் பெற்றனர். 


தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் வடக்கு மண்டல காவல்துறை சார்பில் பங்கேற்று பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெறுமை சேர்த்த காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா. ராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  அருட்செல்வம்  உடனிருந்தார். 

No comments:

Post a Comment

*/