சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்னும் வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலி. 200 ஆண்டுகளுக்கு முன் கார் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையாக சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக வடலூர் வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் மற்றும் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் மற்றும் வடலூர் சத்தியநான சபை ஆகிய இடங்களில் வழிபாடு மேற்கொண்டார் பின்னர் வள்ளலாரின் சொற்பொழிவு இன்னிசை கச்சேரியை பார்வையிட்டார்.
மேலும் நிகழ்ச்சியில் வி.பாலு, திருவருட்பிரகாச வள்ளலார் விழாக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் நா.து.முருகானந்தம், மாநிலத்தலைவர் பா.பிரபாகரன் விழாக்குழு மாநிலச்செயலர் குரு.சுப்ரமணியன், தனலட்சுமி அம்மாள், திருவண்ணாமலை சாது. ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment