மனுவில் கூறியிருப்பது என்னவென்றால், சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயில் ஆனி திருமஞ்சனம் தேர் தரிசன திருவிழா முன்னிட்டு 10 நாட்கள் உற்சவம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது இத்திருவிழா காலங்களில் தேர்த்திருவிழா தினத்திற்கு முதல் நாள் அதிகாலையில் இருந்து ஸ்ரீ நடராஜருக்கு தேருக்கான நகைகள் எல்லாம் எடுத்து வந்து அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீ நடராஜருக்கு தேருக்கான வஸ்திரித்தால் ஸ்ரீ நடராஜர் திருமேனி மூடப்பட்டிருக்கும் அப்போது 1500 ஆண்டுகளை பழங்கால நகைகள் எல்லாம் எடுத்து வரப்படுவதால் அந்த நாளில் இருந்து பல்லாக்கு முடியும் வரை கனக சபை மீது பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இது சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயிலின் தீச்சிதர்களின் தனித்துவமான ஜனநாயக நிர்வாகத்தின் கீழ் செய்யப்படுகிறது மேலும் மற்ற எந்த திருக்கோயிலில் இருக்கும் இல்லாத வகையில் மூலவரான ஸ்ரீ சிவகாமி அம்மன் ஸ்ரீ நடராஜர் திரு தேரில் திருவீதி வலம் வருவார் இக்க காரணங்களால் திருவிழா காலங்களில் சில பூஜை நேரங்களில் கனக சபை மீது பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை இவையெல்லாம் பாரம்பரிய வழிபட்டு வருபவர்களுக்கே தெரியும் நாட்டியவாதிகள் தீட்சைகளுக்கு எதிரான மனநிலையால் இருக்கும் ஒரு சிலர் இவற்றை அறிந்த தீக்ஷிதர்களின் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது செய்து வருகிறார்கள் எனவே இத்திருவிழா காலங்களில் கனக சபை மீது அனுமதியக்காததை உணர்ந்து தீச்சுதர்களுக்கு எதிரான புகார்களை விசாரணைக்கு உகந்தது இல்லை என பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனு அளித்துள்ளனர்.
இதில் முன்னாள் இராணுவ வீரர்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் கேப்டன் ஜி. பாலசுப்பிரமணியன் மாநில செயற்குழு உறுப்பினர் கேபி ராமச்சந்திரன் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரகுபதி ராணுவ பிரிவுமாவட்டத் தலைவர் உத்திராபதி கல்வியாளர் பிரிவு மாநில அலுவலக செயலாளர் அலுவலக செயலாளர் நாகேஸ்வர பாபு மற்றும் நகர பொறுப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment