அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீதேறி சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் அடிப்படையில்20.04.2022 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை ஒட்டி கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று 17.05.2022 ல் தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டது.
கடந்த ஓராண்டு காலம் வழிபட்டு வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அன்று பக்தர்களுக்கு கனகசபை மீதேறி சுவாமி தரிசனத்திற்கு தடை விதித்த பொது தீச்சிதர்களிடம் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் கனகசபை மீதேறி வழிபட தடை விதிக்கக் கூடாது என்றும் வைக்கப்பட்ட பதாகையை எடுக்கக் கூறியும் பொது தீட்சிதர்களிடம் அரசு அதிகாரிகளான இந்து சமய அறநிலைத்துறை தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் கூறினார்கள்.
அவர்களிடம் வழிபட தடை விதித்து வைக்கப்பட்ட பதாகையை எடுக்க முடியாது என்று தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கனக சபை மீது ஏறி வழிபட தடை விதித்து வைக்கப்பட்ட பதாகையை அப்புறப்படுத்த சென்ற அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த பொது தீட்சிசதர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்களின் தீர்ப்பையும் தமிழக அரசின் அரசு ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில் கனக சபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . கொடுக்கப்பட்டுள்ள அந்த புகார் மனுவில் ஜெமினி எம்.என்.ராதா கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் ஆண்டவனுக்கு அடுத்து அர்ச்சர்களை தான் நாம் வணங்குகின்றோம் அப்படிப்பட்ட அர்ச்சர்கள் பக்தர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறியுள்ளார் இதைவிட வேறு யாரும் பொது தீட்சிதர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு கருத்து கூற முடியாது எனவே சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் பக்தர்களோடும் தமிழக அரசோடும் இணக்கமாக இருக்க வேண்டும். என்று ஜெமினி எம்.என். ராதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment