சாலை கற்கள் பெயர்ந்து, பயன்படுத்த முடியாமல் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இப்படியே இருக்கிறது. இந்த சாலையை தரமான சாலையாக அமைக்க வேண்டும் என ஓடக்கநல்லூர், தரசூர், வாக்கூர், வடப்பாக்கம் உள்ளிட்ட நான்கு கிராம விவசாயிகள் தங்களது கோரிக்கையை எல்லா மட்டத்திலும் கோரிக்கை வைத்து பார்த்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என்று தெரிவிக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து தரமான சாலையாக அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள நான்கு கிராம விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.புவனகிரி அருகே ஓடாக்கநல்லூர் கிராம பகுதியில் மோசமான வயல்வெளி சாலையால் நான்கு கிராம விவசாயிகள் கடும் அவதி.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஓடாக்கநல்லூர் பகுதியில் - வாக்கூர், தரசூர், வடப்பாக்கம் ஆகிய கிராமங்கள் இணையும் வயல்வெளி சாலை இருந்து வருகிறது. இந்த சாலை இப்பகுதியில் உள்ள சுமார் 2000 ஏக்கருக்கு மேல் விவசாய விளை நிலங்களில் விளையும் விவசாய விளை பொருட்களை எடுத்து வரவும், உழவு வாகனங்கள், உழவு பணிகளுக்கு தேவையான பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இவ்வாறு அதி முக்கியத்துவம் வாய்ந்த சாலை மழைக்காலங்களில் மிக மோசமாகவும் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்ற நிலையிலும் சேதம் அடைந்து வருகிறது.
சாலை கற்கள் பெயர்ந்து, பயன்படுத்த முடியாமல் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இப்படியே இருந்து வருகிறது. இந்த சாலையை தரமான சாலையாக அமைக்க வேண்டும் என ஓடக்கநல்லூர், தரசூர், வாக்கூர், வடப்பாக்கம் உள்ளிட்ட நான்கு கிராம விவசாயிகள் தங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் தெரிவித்தும் இதுவரை அந்த கோரிக்கைக்கான தீர்வு கிடைக்காத நிலை இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் தினந்தோறும் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளிகள் நடந்து சென்று வருகின்றனர்.
அவர்களாலும் செல்ல முடியாத அளவில் மோசமான நிலையில் சாலை இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து தரமான சாலையாக அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள நான்கு கிராம விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.. முக்கியமாக கடலூர் மாவட்டத்தில் தற்போது சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு இடங்களில் தமிழக அரசு சார்பில் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஓடாக்கநல்லூர் பகுதியில் செல்லும் வயல்வெளி சாலையையும் சரி செய்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என விவசாயிகள், கிராம மக்களோடு பல்வேறு தரப்பினரும் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment