கடந்த 11.04.2023 தேதி சிதம்பரம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் கஞ்சா மற்றும் போதை தடுப்பு சம்பந்தமாக சிதம்பரம் முத்துமாணிக்க நாடார் தெரு, பாலா கோயில் அருகே கண்காணித்துக் கொண்டிருந்தபோது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற நபரை பிடித்து சோதனை செய்து பார்த்தபோது சுமார் 1.550 கிலோ கஞ்சா வைத்திருந்த சிவா (எ) சிவராஜ் வயது 24, த/பெ முத்துகுமரன், K. ஆடூர், சிதம்பரம் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவர் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ரவுடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் மீது சிதம்பரம் நகர், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, சென்னை மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், ஓட்டேரி, பொறையார், புதுப்பட்டினம், சீர்காழி அம்மாபேட்டை, ஆவுடையார்கோயில் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் என மொத்தம் 40 வழக்குகள் உள்ளன.
இவர்களின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக்காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் எதிரி ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment