பிரபல கள்ளச்சாராய வியாபாரி பில்லாலி பாபு தடுப்பு காவலில் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2023

பிரபல கள்ளச்சாராய வியாபாரி பில்லாலி பாபு தடுப்பு காவலில் கைது.

கடந்த 15.05.2023 ஆம் தேதி பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு மேல்குமாரமங்கலம் பாலத்தின் கீழ் கண்காணித்துக் கொண்டிருந்தபோது பாபு வயது 62, த/பெ ஆறுமுகம் மாரியம்மன் கோயில் தெரு, பில்லாலி தொட்டி என்பவர் 110 லிட்டர் சாராயம் வைத்திருந்தவரை மடக்கி பிடித்து கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

இவர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு, கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு, நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய காவல் நிலையங்களில் 21 சாராய வழக்குகள் உள்ளன. மேலும் இரண்டு முறை தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டவர்.தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருபவர், இவரின் கள்ளச்சாராய கடத்தல் விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா. இராஜாராம்  பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ்  ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் எதிரி ஓராண்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். 


No comments:

Post a Comment

*/