பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார் . இந்த முகாமை விநாயகபுரம் அருள்மிகு கருப்பசாமி சித்தர் பீடம் அருள்வாக்கு சித்தர் ஆறுமுகசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு தொழிலதிபர்கள் முனியப்பன், சுப்பிரமணி, தர்மபுரியைச் சேர்ந்த ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் முகாமில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, வினிதா உள்ளிட்ட18 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த முகாமில் பரிசோதனை மேற்கொண்டு மேல் சிகிச்சை தேவைப்படுபவர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர், முகாமில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். முடிவில் பள்ளி முதல்வர் கோப்பெருந்தேவி மணிவண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment