சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் தரிசனம் காலதாமதம் இன்றி நடத்த வேண்டும் அமைச்சர் பி.கே.சேகர் பாபு விடம் காங்கிரஸ் கட்சியினர் மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 June 2023

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் தரிசனம் காலதாமதம் இன்றி நடத்த வேண்டும் அமைச்சர் பி.கே.சேகர் பாபு விடம் காங்கிரஸ் கட்சியினர் மனு.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே.சேகர் பாபுவை  சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை  அளித்தார் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிதம்பரம் நடராஜர் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மார்கழி மாதங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். ஆனித் திருமஞ்சன தரிசன திருவிழா வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 25-ஆம் தேதி தோத் திருவிழாவும், 26-ஆம் தேதி மகாபிஷேகம், ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறவுள்ளன.


கடந்த காலங்களில் காலை 11 மணி அளவில் நடைபெற்றது. பின்பு 12.30 மணி அதன்பிறகு 1.30 மணி 3 மணி என்று தரிசனம் நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி6ம் தேதி மார்கழி தரிசனம் மாலை 6 மணி அளவில் நடத்தினார்கள். தரிசனம் நடைபெறும் நேரம் தெரியாத காரணத்தால் காலை 10 மணி முதல் கோவிலுக்குள் வந்த பக்தர்கள் மாலை 6 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது . இயற்கை உபாதைகளுக்கு உள்ளாகியும்ஒரு சிலர் மயக்கமடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது கைக்குழந்தைகள் வைத்திருந்த தாய்மார்கள் குடிக்க நீரின்றி உண்ண உணவின்றி மிகவும் சிரமம் அடைந்தனர். 


எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வருகிற ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ள ஆனி திருமஞ்சன தரிசன திருவிழ நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் அல்லது காலதாமதம்  இல்லாமல் நடத்த பொது தீட்சிதர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 


மேலும் கோவிலில் அவசர சிகிச்சை முதலுதவி மையம்  அமைக்க வேண்டும். கோவிலுக்கு வருகிற பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிவறை அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது மனுவை  பெற்றுக் கொண்ட அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ஆர். சம்பந்த மூர்த்தி  செந்தில் ஆகியோர் உடனிருந்தனர். மனுவின்நகலை கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர். 

No comments:

Post a Comment

*/