பிரதமர் மோடியின் 9து ஆண்டுகால சாதனை விளக்கக் கூட்டம் 20 .6 .2023 மாலை 4 .00 மணி அளவில் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, அணி பிரிவுகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ,கூட்டுறவு துறை பிரிவின் மாநில செயலாளர் துரை.செந்தாமரைக்கண்ணன், மீனவர் அணி மாநில செயலாளர் எழிலரசி ஆறுமுகம், , பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மாநகர மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெயா தசரதன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அணியின் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், ஊடகப் பிரிவின் மாவட்டத் தலைவர் பந்தல் பரசுராமன், மற்றும் பல்வேறு அணிகளை சார்ந்த மாநில, மாவட்ட,மாநகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற ஆலோசனைகளை வழங்கினர்.
கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநில மாவட்ட ஒன்றிய அணி பிரிவுகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூர் செம்மண்டலம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட மகளிர் அணி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைகூட்டம் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் மாநில செயலாளர் இரா .அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment