சாலையோரம் மரக்கன்றுகள் நடும் அதிகாரிகள் அதனை விதிமுறைகளோடு தொடர்ந்து பராமரிக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் அதிகாரிகள் அதனை விதிமுறைகளோடு தொடர்ந்து பராமரிக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் புவனகிரி, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் எனப் பல பகுதிகளிலும் தற்போது நெடுஞ்சாலைத் துறை மூலம் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று வருகிறது. மரக்கன்றுவது நடுவது நல்ல விஷயம் தான் என்றாலும அதனை பராமரித்து பாதுகாப்பது என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. 

பொதுமக்கள் கூறும்போதுதற்போது துறை அதிகாரிகள் புதிய மரக்கன்றுகள் நடும் இடங்களில் எல்லாம் பல மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்கள் தான். அவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகள் என்னாயிற்று? ஏன் மரமாக வளரும் அளவிற்கு பராமரிக்கப்படவில்லை என  கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதைவிட மரக்கன்றுகள் நடுவது என்பது சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் என்பது உண்மைதான் என்றாலும் மரக்கன்றுகள் நட்ட பின்பு அதனை பாதுகாப்பதற்கு தகரக் கூண்டு, அல்லது கம்பி வலை கூண்டு வைக்க வேண்டும். 


ஆனால் இங்கு  மரக் குச்சிகளை நட்டு அதிலே பச்சை நிற துணி வலை சுற்றி விடுகின்றனர். அவ்வாறு செய்தால் சில நாட்களில் காற்றினாலோ அல்லது ஆடு மாடுகளாலோ அந்த பச்சை நிற வலைத் துணி கிழிந்து காற்றில் அடித்துச்செல்லப்படுகிறது. எனவே முன்பு போல் அல்லாமல் மரக்கன்றுகளுக்கு கம்பி வலை பாதுகாப்பு வைத்து அரசின் பொருளாதாரம் பாதிக்கப்படாதவாறுதொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

No comments:

Post a Comment

*/