தொடர்ந்து, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது, அரசு சேவை இல்ல விடுதியில் தங்கி 145 மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவ்விடுதியிலிருந்து ஸ்ரீவரதம் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் பாதையானது ஒரு வழிப்பாதையாக உள்ளதால் அந்த வழிதடத்தில் பேருந்து வசதி இல்லாத காரணத்தினாலும் மாணவியர்கள் 3 கி.மீ தொலைவு நடந்து சென்றுவருது சிரமமாக இருந்த நிலையில், காலை (8.30-9.00 மணியளவிலும்) மற்றும் மாலை (5.00-5.30 மணியளவிலும்) மாணவிகள் இரு வேளையும் சிரமமின்றி பள்ளிக்கு சென்றுவர ஏதுவாக பிரத்தியேக அரசு பேருந்து சேவையினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவிகள் தங்களின் கவனத்தை முழுமையாக படிப்பில் செலுத்த வேண்டும். சூழ்நிலையை காரணமாக வைத்து முயற்சிகளை கைவிடக்கூடாது. மாணவியர்கள் நன்நடத்தையுடன் நேர்மையான சிந்தனையுடன் திகழவேண்டும். தங்களது இலக்கை எய்திட தேவையான முயற்சிகனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ், மற்றும் வி.எஸ்.எல்.குணசேகரன் ,கூட்டுறவு சங்கங்கள் தலைவர் ஆதி. பெருமாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கே.எஸ்.ஆர்.பாலாஜி சமூக நல அலுவலர் (பொ) திருமதி.கோமதி , அரசு சேவை இல்ல கண்காணிப்பாளர் திருமதி.அமுதா அவர்கள், போக்குவரத்து கழகம் கடலூர் மண்டலம் உதவி மேலாளர் (வணிகம்) திரு.சிவக்குமார் அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment