உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கடலூர் புதிய மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.. மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகில்நிலவன் முன்னிலை வகித்தார்.
மீன்வளத்துறை கண்காணிப்பாளர் ராஜசிம்மன், ஆய்வாளர் அஞ்சனாதேவி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய் கிருஷ்ணன், கடலூர் ஜியோ சென்டர் மேலாளர்கள் தினேஷ் முருகன், கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர், சாகர் மாலா திட்ட பணியாளர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் ஆபத்து தடுப்பு செயல்பாட்டினை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் 2000 மரக்கன்றுகள் நடும் நோக்கிலும் இந்நிகழ்ச்சியானது துவக்கப்பட்டது கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் இளங்கோவன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment