சிறப்பு விருந்தினர்களாக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், கடலூர் கிழக்குமாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், சேத்தியாத்தோப்பு எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவருமான கானூர் பாலசுந்தரம், ஆகியோர் நேரில் ஆய்வு செய்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அறிவுறுத்தல்களை, ஆலோசனைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆய்வின் போது ஆண்களும் பெண்களும் உற்சாகமாக பங்கேற்று தங்களை அதிமுகவில் புதிய உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறும் விதத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உழைத்தால் உங்களுக்கும் உழைப்புக்குத் தகுந்த பதவி நீங்கள் கேட்காமலேயே உங்களைத் தேடி வரும் என்று உறுதி அளித்து கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் எம் எல் ஏவுமாகிய கே ஏ. பாண்டியன் பேசினார்.
No comments:
Post a Comment