கடலூர் திருப்பாப்புலியூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பதவி ஏற்பு விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோயில் அறங்காவலர்களாக கூத்தப்பாக்கம் ஆர் சாரங்கபாணி நாயுடு ஆர் ராதா கிருஷ்ணன் நாயுடு திருப்பாப்புலியூர் ஏ என் கிஷோர் நாயுடு திருப்பாப்புலியூர் ஜி கமலநாதன் நாயுடு திருப்பாப்புலியூர் டி ஆர் கோவிந்தராஜ் கோவிந்தராஜலு நாயுடு ஆகியோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அறங்காவலர்கள் வரதராஜ பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் முன்னிலையில் அறங்காவலர்கள் பதவி ஏற்று கொண்டார்கள். ஆய்வாளர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆலய தலைமை எழுத்தர் ஆழ்வார் மற்றும் கணினி ஆப்ரேட்டர் கௌசல்யா நாயுடு சங்க துணை தலைவர் ரமேஷ் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment