கடலூர் ஒன்றியம் சேடப்பாளையம் ஊராட்சி காரைக்காடு கிராமத்தில் ஸ்ரீ ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் கிருத்திகை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மாலையில் சின்ன காரைக்காடு சின்ன வாத்தியார் இரா. திருஞானசம்பந்தம் பிறந்த நாளை முன்னிட்டு ஆலயத்திற்கு சிறிய ஊர்வல தேர் செய்யப்பட்டு ஆலயத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில் சின்ன காரக்காடு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் மலர்களால் அலங்கரிக்கபட்டு வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. வீதி உலா நிகழ்ச்சியில் வண்டி பாளையம் அப்பர் கைலாய வாத்திய குழுவினர் இசை இசைத்து பாடல்கள் பாடினர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment