ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூரில் கரும்பு பயிரில் மர்ம நோய் தாக்குதல்; 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பாதிப்பு. வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 June 2023

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூரில் கரும்பு பயிரில் மர்ம நோய் தாக்குதல்; 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பாதிப்பு. வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் கிராமம் உள்ளது. இக்கிராமம் மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளில் முக்கிய விவசாயப் பயிராக கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு சுமார்  100 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரில் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 


இந்த மர்ம நோய் தாக்குதல் என்பது கரும்பு பயிரின் வளர்ச்சியை முற்றிலுமாக முடக்கி விட்டு அதன் தோகைகளை காய்ந்து போகச் செய்கிறது . இது அப்படியே நன்றாக இருக்கும் மற்ற கரும்பு பயிருக்கும் பரவுகிறது. இதனை நன்றாகப் பார்த்தாலே தெரியும். இப்பகுதி விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு பயிர் செய்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் இந்த மர்ம நோய் தாக்குதல் இருந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். 


இதனால் தற்போது இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக் கொண்டுள்ளனர். தங்களது அனுபவத்தில் அறிந்ததை வைத்து தாங்களாகவே விதவிதமான பூச்சி மருந்துகள் வாங்கி பாதிக்கப்பட்ட கரும்பு பயிரில் தெளித்த நிலையிலும் இந்த மர்ம நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என சோகமாகக் கூறுகின்றனர். கரும்பு பயிரில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம நோய் தாக்குதல் கடுமையான பொருளாதார இழப்பைஏற்படுத்துகிறது மேலும் என் நோய் மற்ற கிராமங்களுக்கும் பரவி விடுமோ எனவும் அஞ்சுகின்றனர்.


 வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக கவனிப்பார்களா? 

No comments:

Post a Comment