கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் மே27 தேதி கடலூர் முதுநகர் வசந்தராயன்பாளையம் பகுதியில் கண்காணித்துக்கொண்டிருந்தபோது புனிதா வயது 40, க/பெ சசிகுமார், சின்னையன் காலனி, வசந்தராயன்பாளையம் என்பவர் அவரது வீட்டின் பின்புறம் 120 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்ததையடுத்து ஆய்வாளர் ஶ்ரீ பிரியா மற்றும் காவல்துறையினர் புனிதாவை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்மீது கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு, கடலூர் முதுநகர் காவல் நிலையங்களில் 7 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருபவர், இவரின் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் புனிதா வை தடுப்பு காவலில் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment