கடலூர் மாவட்டத்தில் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு தூக்கனாம்பாக்கம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 June 2023

கடலூர் மாவட்டத்தில் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு தூக்கனாம்பாக்கம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம்  வழிகாட்டுதலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) அசோகன்  தலைமையில் கடலூர் மாவட்டத்தில் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு தூக்கனாம்பாக்கம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது. 


தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும், மாணவர்கள் நன்றாக படிக்கும் திறன் இருந்து வாய்ப்பு இல்லை என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கித் தரப்படும் எனவும், வசிப்பிட பகுதிகளில் அடிப்படை வசதிகள் அரசால் கிடைக்கப் பெறவில்லையென்றால் கிடைப்பதற்கு பரிந்துரை செய்யப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு சமூகத்தில் போதிய நடவடிக்கை எடுத்து அனைத்து துறைகளிலும் காவல்துறை மூலமாக பரிந்துரை செய்ய வழி வகைகள் உண்டு என்பதை கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திருமதி தீபா, புள்ளியல் துறை ஆய்வாளர்  ரவிசங்கர், உதவி ஆய்வாளர்கள் பாலாஜி, பாலச்சந்தர், ஜோதி மற்றும் காவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

*/