கடலூர் ஒன்றியம் பாதிரிப்பம் ஊராட்சி குமார பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திராவிட முன்னேற்ற கழக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் .ஆர் .கே. பி. கதிரவன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில்: ஒன்றிய செயலாளர் காசிராஜன் அரிசி பெரியகுப்பம் கிளை கழக செயலாளர் தீபன் என்கிற ராமச்சந்திரன் குமார பேட்டை கிளை கழக செயலாளர் வி வெங்கடேசன் ஆர். விஜி பூபாலன் சுந்தரம் ரமேஷ்பாபு கொளஞ்சியப்பன் சுபாஷ் ஜெயபால் பழனிவேல் அருண், மாவட்ட பொறுப்பாளர் இளைஞர் அணி பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தென்னங்கன்று மற்றும் பெண்களுக்கு இலவச புடவை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment