தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பி. நல்லதம்பி கல்வெட்டு என்னை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் ம.ரா. சிங்காரம் சங்கத்தின் கொடி ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் ந. சுந்தர்ராஜா சிறப்பு ஆற்றினார், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் வி.குணசேகரன், மாவட்ட ஆட்சியரக உதவி கணக்கு அலுவலர் எஸ். ராகவாநந்தம், தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை நேரடி உதவியாளர் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.மாரி, புஷ்ப பாலன் உட்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், இறுதியாக முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மே தின கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது, விழாவிற்கு கடலூர் மாவட்ட தலைவர்வி.தனசேகரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் டி.சதீஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்த, கடலூர் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.வீரவேல், கடலூர் வட்டக் கிளை தலைவர் ஏ. கருணாமூர்த்தி, வட்ட செயலாளர் கே. சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமரன், மாவட்ட இணை செயலாளர் எம். முரளிதரன் ஆகியோர் முன்னிலையிலும் விழா நடைபெற்றது.
No comments:
Post a Comment