தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தி.ச.திருமார்பன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. எஸ். சந்திரசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி, உலக தமிழ்ச் சங்க நிர்வாகி கதிர் முத்தையன், கடலூர் பொதுநல இயக்கங்களில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் .என். கே .ரவி, திராவிட கழகம் கவிஞர் எழிலேந்தி, திராவிடர் விடுதலை இயக்கம் சிவக்குமார், தமிழ்நாடு மீனவர் பேரவை சங்க மாவட்ட தலைவர் சுப்புராயன், திராவிட கழக மாவட்ட தலைவர் தென் .சிவகுமார், திமுக மாணவர் அணி தலைவர் அகஸ்தியன் பிரபாகரன், மக்கள் அதிகாரம் பாலு, ரவி, வெங்கடேசன், உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன் மனித நேய ஜனநாயக கட்சி மன்சூர், உட்பட தமிழ் உணர்வாளர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மனு அளித்தனர்.
கடலூரில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடலூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் சனாதனத்தை இறுதிவரை எதிர்த்து ஆன்மீக புரட்சியாளர் வடலூர் அருட்பிரகாச வள்ளலாரை அவமதிப்பு செய்து சன்மார்க்க நெறியாளர்கள் மனதை புண்படுத்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என் .ரவி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment