அப்போது உள்ளே பணம், பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து சென்று விட்டனர். இந்த கோவிலின் உண்டியல் இரண்டு தினங்களுக்கு முன்பு கோவில் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் உண்டியலில் ஏதும் பணமும் பொருட்களும் இல்லை.
இந்நிலையில் இதே கிராமத்தில் சிதம்பரம் சாலையின் ஓரமாக உள்ள பாலமுருகன் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதிலுள்ள பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரண்டு கோவில்களில் உண்டியலை உடைத்த சம்பவங்கள் குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். முக்கியமாக இரண்டு கோவில்களும் குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள் என மெயின் ரோட்டில் உள்ள கோவில்களில் சர்வ சாதாரணமாக இந்த திருட்டு நடந்துள்ளது குறித்து அப்பகுதி குடியிருப்புகளும் பொதுமக்களும் அச்சமடைந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment