கடலூர் கூத்தப்பாக்கம் பங்கஜம் கார்டன் நகரில் அமைந்துள்ள நெ.1.நியாயவிலைக்கடை அருகில் ரோட்டரி சங்கத்தின் கட்டிடம் அடிக்கல், பூமிபூஜை விழா நடைபெற்றது . இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு கடலூர் கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கத் தலைவர் எச்.ஷாநவாஸ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி ஜி.சரவணன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சேர்மன் கே. வைத்தியநாதன், பி .ஆனந்தன், உதவி ஆளுநர் எஸ் .அசோக் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் பி.சிவசக்தி வேலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க தலைவர் எச்.ஷாநவாஸ், செயலாளர் பி..சிவசக்திவேலன் ,பொருளாளர் எஸ்.இராமலிங்கம், ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment