சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை குறித்த காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சிதம்பரம் ஜெமினி எம்.என்.ராதா கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 June 2023

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை குறித்த காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சிதம்பரம் ஜெமினி எம்.என்.ராதா கோரிக்கை.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் கொடி ஏற்றப்பட்டு தேர் தரிசனம் உள்பட 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் தரிசனம் கடந்த காலங்களில் சுமார் காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது. பின்பு 12.30 மணி என்றும். 1.30 மணி என்றும். 3.00 மணி என்றும் தரிசனம் நடைபெற்று வந்தது.

இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில் மாவட்ட காவல்துறை நிர்வாகமும், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களும், பொது தீக்ஷிதர்களிடம் பக்தர்கள் படும் இன்னல்கள் குறித்து காலதாமதம் இல்லாமல் தரிசனத்தை நடத்த வேண்டும் என்று எடுத்து கூறினார்கள். ஆனால் இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட தீக்ஷிதர்கள் கடந்த 2023 ஜனவரி 6ஆம் தேதி அன்றும் நடைபெற்ற மார்கழி தரிசனம் காலம் தாழ்ந்து சுமார் மாலை 6.15 மணி அளவில் தீக்ஷிதர்கள் நடத்தினார்கள்.


பொது தீக்ஷிதர்கள் ஆகம விதிப்படி நடத்தும் பூஜையில் நாம் தலையிடவில்லை. ஆனால் தரிசனம் எந்த நேரத்தில் நடைபெறும் என்று பொது தீக்ஷிதர்கள் அறிவித்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே இது குறித்து சார் ஆட்சியர் அவர்களும், துணை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும், நடவடிக்கை எடுத்து பக்தர்களின் நலன் கருதி, வரும் ஜூன் 26ந்தேதி நடக்கும் தரிசனத்தை ஆகம விதிக்கு உட்பட்டு காலதாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் நடைபெறுவதற்கு உத்தரவிடவேண்டும்.


ஏன் என்றால் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி மாலை சுமார் 6.15 மணி அளவில் தரிசனம் நடைபெறும் என்று பொதுமக்களுக்கும். பக்தர்களுக்கும் தெரியாத காரணத்தால் காலை சுமார் 10 மணி அளவில் கோவிலுக்குள் வந்த பக்தர்கள் மாலை 6.00 மணி வரை தங்களது இயற்கை உபாதைகளுக்கு உள்ளாகி, ஒரு சிலர் மயக்கம் அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள். முதியோர். கைக்குழந்தைகள் வைத்துக்கொண்டிருந்த தாய்மார்கள் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி மிகவும் கஷ்டப்பட்டார்கள்.


மேலும் கோயிலில் அவசர சிகிச்சை முதலுதவி மையம் அமைக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்கு தற்காலிக கழிவறை அமைத்து கொடுக்க உதவிட வேண்டுகிறோம். என்று ஜெமினி.எம்.என்.ராதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment