கிருஷ்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில் புதுச்சேரி பீன்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, நோய் கண்டறிதல், கண் குறைபாடுகளை கண்டறியும் கேட்ராக்ட் சோதனை மற்றும் கிட்ட பார்வை, தூர பார்வை குறைபாடு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டனர்.
பின்னர் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது, கண்ணில் குறைபாடு உள்ள பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தேவை இருப்பின் அவர்கள் இலவசமாக வாகனம் மூலம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இம் முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பரிசோதனையை மேற்கொண்டனர், நிகழ்ச்சியில் ரெஸ்ட் தொண்டு நிறுவன நிறுவனர் பவுல்ராஜ், மார்ஷலின் வின்சென்ட், பிம்ஸ் மருத்துவமனை மூகாம் அமைப்பாளர் ஆரோக்கியசாமி, கட்டியங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர், ஊராட்சி செயலர் கனகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment