ஆறு வருடங்களுக்கு முன்பு வேலை செய்யும் இடத்தில் ராஜமன்னார்குடி அருகே உள்ள சேராக்குளத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு மூன்று வயதில் பிரித்திஷா என்ற மகளும் ஒன்றரை வயதில் கவின் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிற்சில பிரச்சனைகளால் மணக்கசப்பாகி கனிமொழியும் பிரசாத்தும் பிரிந்து கனிமொழி தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு சிறுவன் கவினை குளிப்பாட்டுவதற்காக வீட்டுத் தோட்டத்தில் படிக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள விறகு அடுப்பில் போடப்பட்டிருந்த வெந்நீர் பானை கொதித்துக் கொண்டிருக்கும் போது, வீட்டில் இருந்தவர்கள் கவனிக்காத நேரத்தில் தோட்டத்துப்படியில் இறங்கிய கவின் தடுமாறி அடிப்பின் மீது இருந்த வெந்நீர் பானையில் விழுந்து, வெந்நீர் பானை சரிந்து சிறுவனின் தலையில் கொட்டியதால் முகம் முழுவதும் வெந்து போய் பலத்த காயமடைந்தான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் சிறுவனை மீட்டு விருத்தாசலம் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவின் சிகிச்சை பலனின்றி(16ஆம்தேதி) நேற்று காலை 7 மணி அளவில் மரணம் அடைந்தான். சிறுவனை குளிப்பாட்டுவதற்காக போடப்பட்ட வெந்நீரில் அந்த சிறுவனே தடுமாறி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுவனின்தாய் கனிமொழி திருமுட்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment