கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சுத்துக்குழி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தையும் பூதவராயன்பேட்டை கிராமத்தையும் இணைக்கும் மானம் பார்த்தான் வாய்க்கால் மேல் இருந்த பழைய பாலம் உடைக்கப்பட்டு வருகிறது.இதில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்காலிகமாக இதன் அருகே மாற்று வழியாக இரண்டு தரைப்பாலங்கள் போடப்பட்டன. இவ்வாறான சூழலில் வாய்க்காலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட அதிகப்படியான தண்ணீரால் தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு காணாமல் போய்விட்டது. இதனால் கிராம மக்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். மேலும் மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி ,கல்லூரி பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எதுவும் இவ்வழியாக செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் எனவும் இனிமேல் அமைக்கும் தரைப்பாலமாவது எளிதில் உடையா வண்ணம், பாலம் கட்டுமானப்பணி முடியும் வரை பயன் தரும் வகையில் தரைப் பாலத்தை அமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி கிராமத்தினர் கோரிக்கைவைக்கின்றனர்.
No comments:
Post a Comment