கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகள் பாக்யலட்சுமி வயது 23. இவர் சென்னையில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் வசித்து வரும் சரவணன் மகன் வினோத் வயது 27 இவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதல் செய்து வந்தநிலையில் வினோத் பாக்யலட்சுமியுடன் பலமுறை தனிமையில் இருவரும் பழகி வந்தனர். தற்போது பாக்யலட்சுமி ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது. இதனால் பாக்யலட்சுமியின் கருவை கலைத்துவிடுமாறு வினோத் வற்புறுத்தியுள்ளார்.
பாக்யலட்சுமி அதனை மறுக்கவே தனது பெற்றோரிடம் தான் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பாக்யலட்சுமி பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வினோத்தை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வண்ணமுத்துமாரியம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment