இது சம்பந்தமாக திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா விசாரணை செய்ததில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான தங்கப்பாண்டியன் (எ) ஏழுமலை வயது 28 த/பெ இளங்கோ, நெ.36 மேட்டு தெரு, SN சாவடி, 2. சதீஷ் (எ) ஹரிதாஸ் வயது 23, த/பெ ராஜாரம் நெ.13/B மாரியம்மன் கோவில் தெரு, கம்மியம்பேட்டை, கடலூர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட தங்கப்பாண்டியன் (எ) ஏழுமலை என்பவருக்கு திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், பெரியகடை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. எதிரி சதீஷ் (எ) ஹரிதாஸ் என்பவருக்கு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, ஒரு கொலைமுயற்சி வழக்கும், 4 கொள்ளை வழக்குகளும் மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. இவர்களின் குற்றசெய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் தங்கபாண்டியன், சதீஷ் ஆகியோரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்கள்.
No comments:
Post a Comment