பின்னர் ரூ 4,00,000/- பணம் கொடுத்தால் தனக்கு தெரிந்த விருத்தாசலம், காப்பான்குளத்தைச் சேர்ந்த சிவராமன் மகன் ராயப்பிள்ளை என்பவரிடம் கூறி அவருக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் என்.எல்.சி-யில் கான்ட்ராக்ட் வேலை வாங்கி கொடுத்துவிடலாம் என ஹரிஹரன் மாமனார் தனது மகள் கமலிக்கும், தனது மருமகனுக்கும் என்.எல்.சி-யில் கான்ட்ராக்டில் வேலை க்கு ரூ 4,00,000/- பணம் கொடுத்தால் ஹரிஹரன் மனைவி கமலிக்கும் வேலை வாங்கி கொடுத்து விடுவதாக கூறி தவணை முறையில் ரூ 4,00,000/- பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்த கமலநாதன், ராயப்பிள்ளை ஆகியோரிடம் ஹரிஹரன் பணம் கேட்டபோது இருவரும் ஹரிஹரன் போலவே 20 நபர்களிடம் வேலைக்காக சுமார் ரூ 60,00,000/- வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரியவந்ததாகவும், நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர கோரி கொடுத்த புகாரின் பேரில் 22.06.2023 ந்தேதி மதியம் 1.30 மணிக்கு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சம்பவம் உண்மையென தெரியவந்ததால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் உத்தரவுப்படி, கடலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர்தேவராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. தேவி அவர்கள் பரிந்துரையின் படியும், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. லிடியாசெல்வி மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் மூலம் 22.06.2023 -ந்தேதி மாலை 3.00 மணிக்கு கமலநாதன், ராயப்பிள்ளை இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் என்.எல்.சி-யில் வேலை வாங்கி தருவதாக கூறி பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் ரூ 60,00,000/-ம் பணத்தை பெற்று எதிரிகள் இருவரும் தனது குடும்ப செலவுக்காக ஆடம்பர செலவழித்தாக கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்று உரிமையியல் மற்றும் குற்றவியல் நீத்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment