நிகழ்ச்சியில் மன்ற துணைத் தலைவர் ஜெயஸ்ரீ அவர்கள் இறை வணக்கம் குரு வணக்கம் பாடி தொடங்கி வைத்தார், விழுப்புரம் மன்டல துணைத் தலைவர் எம்.ஆர் ஏழுமலை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், வடலூர் அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் பரமசிவம் மற்றும் மருத்துவர் நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் , அகத்தாய்வு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் மண்டல துணைத் தலைவர் எம் ஆர் எழுமலை அவர்கள் பேசுகையில் தினமும் யோகா பயிற்சி மேற்கேள்வதால் உடல்நலம், மனநலம் ஆகியவை தூய்மை பெறுகிறது மேலும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நோய்யற்றை வாழ்வை வாழ்வதற்கு வழி வகுக்கிறது மேலும் யோகா செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து எடுத்துரைத்தார்
நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்திய துணை பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் வி.வினோதினி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment