கடலூர் ஒன்றியம் கொடுக்கண் பாளையம் ஊராட்சி கீரப்பாளையத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் திடீரென்று ஏற்பட்ட சூறை காற்றினால் அனைத்து மரங்களும் ஒடிந்து சாய்ந்தன. கொடுக்கண்பாளையம் ஊராட்சி கீரப்பாளையத்தில் விவசாயி சுப்பிரமணியன் 2 ஏக்கர், சாமிநாதன் 2 ஏக்கர், துரைக்கண்ணு 2 ஏக்கர், தணிகாசலம் 3 ஏக்கர், கங்கா மூணு ஏக்கர், சிவமணி 3 ஏக்கர், கமலக்கண்ணன் 1ஏக்கர், கணபதி 2 ஏக்கர், பஞ்சமூர்த்தி 3 ஏக்கர் அரசடி குப்பம் கதிர்வேலு 5 ஏக்கர், ஏழுமலை 2 ஏக்கர், சக்திவேல் 2 ஏக்கர் மற்றும் பயிரிடப்பட்ட நிலத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் அடியோடு ஒடிந்து சாய்ந்தன.
இதேபோன்று ஓதியடி குப்பத்தில் அரசடி குப்பம்அனைத்து விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வாழை மரங்களும் சூறைக்காற்றினால் ஒடிந்து சாய்ந்தன இதனால் கீரப்பாளையம் அரசடி குப்பம் ஒதியடி குப்பம் பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக சூறை காற்றினால் விழுந்த மரங்களுக்கு உடனடி தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment