சமூக வலைத்தளங்களில் (Facebook, Whatsapp, Instagram etc.,) உங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம். OTP யை யாரிடமும் பகிர வேண்டாம், லோன் ஆப்பில் (Loan App) நுழைய வேண்டாம், Online Part Time Jobல் வேலை தேட வேண்டாம், முகம் தெரியாத நபர்கள் Online வாயிலாக தொடர்பு கொண்டு பணம் பெறும் நோக்கில் நம்பும்படி பேசினால் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம், இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு, கடலூர் துணை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு. காவல் ஆய்வாளர்கள் திருமதி. கவிதா, குருமூர்த்தி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் அமர்நாத் மற்றும் சைபர் கிரைம் போலீசார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment