கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி 31.05.2023 தேதி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் அரங்கநாதன், சங்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிங்காரவேலன், பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன், நாகபிள்ளை ஆகியோரை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார்.
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்மென வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற காவல் துறையினர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு ஊதியம், சிறப்பு சேமநல நிதி, குடும்ப சேமநல நிதி ஆகிய பண பயன்கள் விரைவாக கிடைக்க வேண்டும் என காவல்துறை அமைச்சுப் பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தனிபிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம், மாவட்ட காவல் நிர்வாக அலுவலர் ஜெயராஜ் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினரின் குடும்பத்தாருடன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment