மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2023

மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில்  துணை மேயர் தாமரைச்செல்வன் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டம் தொடங்கியதும் மேயர் சுந்தரி ராஜா அனைத்து தீர்மானங்கள்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக  அறிவித்தார் இதனைத் தொடர்ந்து அதிமுக வை சேர்ந்த 27வது வார்டு உறுப்பினர் சங்கீதா வசந்த ராஜ் பேசுகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அவரது உருவ சிலை வைக்கப்படும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் இதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் கள்ளச்சாராயம்  குடித்து 23 பேர் இறந்துள்ளனர் இதனை தடுக்க தவறிய தமிழக அரசை அதிமுக சார்பில் கண்டித்து தெரிவித்து வெளிநடப்பு செய்கின்றோம் என்று அறிவித்தார் இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக கவுன்சிலர்கள்  பதிலளித்தனர்  தொடர்ந்து  பேசிய அதிமுக உறுப்பினர் சங்கீதா வசந்தராஜ்  மேயர் தான் பதில் அளிக்க வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் பதிலளிப்பது ஏற்றுகொள்ள முடியாது என்று பேசினார்.


மறுபடியும் திமுக கவுன்சிலர்கள் குறுக்கிட்டதை கடுமையாக எதிர்த்து பேசினார் இதனால் கவுன்சிலர்களுக்கிடையே கடுமையாக வாக்குவாதம் முற்றியதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் மகேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை சமாதானம் செய்து உங்கள் கோரிக்கை தொடர்பாக மேயர் பதிலளிப்பார் ஆகையால் தேவை இன்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்  தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் சங்கீதாவசந்தராஜ், ஏ.ஜி தர்ஷனா, வினோத், பரணி முருகன் , அலமேலு, சுரேஷ்பாபு ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் செய்தனர்.

No comments:

Post a Comment

*/