சமுத்திரபராக்கிரமம் 2023 பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்பும் குழுவில் புதுவை என். சி.சி குரூப் கமாண்டர் ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2023

சமுத்திரபராக்கிரமம் 2023 பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்பும் குழுவில் புதுவை என். சி.சி குரூப் கமாண்டர் ஆய்வு


தமிழ்நாடு தேசிய மாணவர் படை கடல் படை பிரிவு மற்றும்  புதுவை 1 தேசிய மாணவர் கடல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல்சார் பாய்மரப்படகு சாகச பயணம் 2023 ஜுன் 2 ஆம் தேதி  காலை புதுவை முதல்வர்  நா .ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. 1ம் நாள் பயணம் முடிந்து கடலூரில் தங்கிய குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வு தேவனாம்பட்டினம் கடற்கரையில் நிகழ்த்தப்பட்டது. 

2ம் நாளின் நிகழ்வாக கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டு 2ம் நாள் பயணம் தொடங்கியது. கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை சென்று ஒரு நாள் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் சார் உயிரின வள மைய அருங்காட்சியகத்தில் கடல் சார் அரிய உயிரினங்களைப் பற்றி அறிந்து கொண்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் ஹைதர் அலியின் ஆங்கிலேருடனான போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட கடற் பாய்மர கம்பத்தில் சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றை அறிந்து கொண்டனர். 


அண்ணாமலை பல்கலைக்கழக கடல் சார் உயிரியல் பல்கலைக்கழக ஆசிரியர்களால் உலக வெப்பமயமாதலில் கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. ஆற்றில் துடுப்பிடும் பயிற்சியான கயாக்கிங் பயிற்சி மாணவர்களுக்கு  அளிக்கப்பட்டது. 4ம் நாள் காலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புல முதன்மையர் அனந்தகிருஷ்ணன்  பரங்கிப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கொடி அசைத்து தொடங்கி வைக்கத் தொடங்கியது. 


கடற் பாய் மரங்களை ஒட்டி பூம்புகார்  சென்ற குழுவினர் உடற்தகுதி பெறுவதற்காக விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர். 5ம் நாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் தலைமை ஏற்று கொடி அசைக்க முன்னிலையாக டி பி எம் எல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பூம்புகாரில் தொடங்கிய இந்தப் பயணம் காரைக்கால் துறைமுகம் வரை வந்து  காரைக்காலில் தனது முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்தனர். பின்பு மரம் நடு விழா  டிபிஎம்எல் கல்லூரி முதல்வர் தொடங்கப்பட்டு குழந்தை தொழிலாளர் நீக்க  விழிப்புணர்வு பேரணி தேசிய மாணவர் படை மாணவர்களால் நடத்தப்பட்டது .6ம் நாள் காரைக்காலில் இருந்து மீண்டும் பாய் மரப் படகில் புதுவை திரும்பும் குழுவினருக்கு வாழ்த்து கூறி புதுவை மாநில போக்குவரத்து துறை அமைச்சர்  டாக்டர் சந்திர பிரியங்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பின்னர் பூம்புகார் சென்ற இக் குழுவினர் தமிழர்களின் தொன்மை கடல் பயணம் குறித்து அறிவதற்காக பூம்புகார் கண்ணகி சிலை மற்றும் டேனிஷ் ஃபோர் ட் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாற்றினை தெரிந்து கொண்டனர். பயணத்தில் 7ம் நாள் பரங்கிப்பேட்டையில் தங்கி பிச்சாவரம் அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொண்டனர்.அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட வனச்சரக அலுவலர் வி. கமலக்கண்ணன் கருத்துரை ஆற்றினார். பயணத்தின் 9ம் நாளான  கடலூர் பழைய துறைமுகத்தில் இருந்து தொடங்கிய பயணத்தை ஆய்வு செய்யும் முகமாகப் புதுவை என்.சி.சி குரூப் கமாண்டர் கர்னல் சோம்ராஜ் குளியா மாணவர்களுடன் கடல் பாய் மர படகில் பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகசப் பாய்மரம் படகு செலுத்தும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 302 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுவையில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பும் நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடல் சாகசப் பயணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களின் பராக்கிரமத்தை வெளிப்படுவத்த இடர்களை எதிர்கொள்ளும் திறன்களை பெறும் பயிற்சிகள் 2023 மே 23 ஆம் தேதி தொடங்கி 1 ஜுன் 2023 வரை கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளுடன்  கடற்கரையைத் தூய்மை  செய்தல் போன்ற சமூக சேவை நிகழ்வுகளும் தீ தடுப்பு மேலாண்மை முதலுதவி அளித்தல் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.  இந்தப் பயிற்சியில் தேர்ந்த குழுவினருடன்  இந்தப் பயணத்தில் லெப்டினன்ட் கமாண்டர் கு. கீர்த்தி நிரஞ்சன் லெப்டினன்ட் கமாண்டர் ச. லோகேஷ்  ஆகிய இரண்டு கடற்படை அதிகாரிகளும்  சப் லெப்டினன்ட் கோபிநாதன், சப் லெப்டினென்ட் மனோகரன் சப் லெப்டினன்ட் சீனிவாசன் சீனியர் ஜிசிஐ மகேஸ்வரி ஆகிய 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் சீப் பெட்டி ஆபிஸர் ராஜசேகர் தலைமையிலான கப்பற்படை பயிற்றுநர்களும் பங்கேற்றுள்ளனர்.


இவர்களுக்கு உதவியாக அவில்தார் அஜய்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பயணம் மேற்கொள்கின்றனர். இப்பயணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில்  மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் கடற்கரை தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். தேசிய மாணவர் படை மாணவர்களின் உள்ளத் திறன் மேம்படுவதோடு கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கி ஆயுதப் படையில் மாணவர்களை சேரும் எண்ணத்தை தூண்டும் பயிற்சியாக இப்பயிற்சி  அமைந்துள்ளது . 

No comments:

Post a Comment

*/