சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 June 2023

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டம்.


கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை யொட்டி கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி 24-வதுவார்டு சார்பில் நலிவுற்ற வர்களுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தையல் மிஷின், அரிசி , வேஷ்டி சட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 24 வது வட்ட சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராஜா. சம்பத் குமார் தலைமை வைத்தார்.


நார் மன்ற உறுப்பினர் ஜெ.மஞ்சுளா வரவேற்றார், மாவட்ட பொது செயலாளர்கள் ஆர்.வி .சின்ராஜ்  ஆறுமுகம்   செல்வகுமார் இளைஞர் அணி தலைவர் ராஜசேகர் செந்தில் வேல்முருகன் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவரும் நகர் மன்ற உறுப்பினர் தில்லை ஆர் மக்கின் ராமச்சந்திரன் தையல் மெஷின் மற்றும் 5 கிலோ கொண்ட அரிசி பை 25 பேருக்கு வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா வேஷ்டி சேலைகள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஆர் சம்பந்த மூர்த்தி நகர காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் தில்லை கோ.குமார் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி கே குமார் இளங்கோவன் வி சண்முகசுந்தரம் சம்பந்தம் பேன்சி எஸ் எஸ் நடராஜன் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சந்துரு மாவட்ட கலைப்பிரிவு நிர்வாகிகள் பொன். மாதவ ஷர்மா கே என் நாராயணசாமி இளைஞர் அணி செயலாளர் ஆர் ராஜ்குமார் ஜே எஸ் லாரன்ஸ் மணி தனசேகர் மாவட்ட செயலாளர் தில்லைசெல்வி மகளிர் அணி நிர்வாகிகள் கோ.ஜனகம் ராதா அழகர் மாலா பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ராஜா. சம்பத்குமார் செய்திருந்தார் இந்நிகழ்ச்சின் முடிவில் செயலாளர் ஆர் ரமேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/