கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நத்தமலை கிராமத்தில் இளையராஜா என்பவர் கறவை மாடுகளை வளர்த்து வந்தார். இந்த மாடுகளை அருகில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போதுநான்கு கறவை மாடுகள் சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனது. இதில் ஒரு மாடு திரும்ப கிடைத்து விட்டது.
மீதம் 3 மாடுகள் திருடு போனது பற்றி போலீசில் அளித்த புகாரின் பேரில் டி.புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில் கறவை மாடுகளை திருடியதாக மானியம் ஆடூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் (22), சைலேஷ் (31) மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த வீரமணி( 33) ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்ப்போது கறவைமாடு திருடர்கள் பிடிபட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் கிராம மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment